உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்தாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இம்மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்

இந்த நிலையில், இந்த வாக்கெடுப்புக்களை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நடவடிக்கைகளில் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You missed