Author: Kalminainet01

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜனாதிபதி செயலகம்

இலங்கையில் அரசாங்க தொழில்களை விட்டு விலகும் ஊழியர்கள்

2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 21856 ஆல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங் ஊழியர்கள்…

இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்

கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த மாதம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபத்தின் மறைவை அடுத்து நாட்டின் அரச அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தின் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் அமைத்திருக்கும் கொடிக்கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலவரையறை நீக்கம்..!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிறப்பு சான்றிதழ்கள், மரண மற்றும் திருமண சான்றிதழ்களின் செல்லுப்படியாகும் காலத்தினை வரையறைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதாக அறிக்கை ஒன்றை விடுத்து…

மட்டக்களப்பில் கோழிப் புரியாணி பாசலில் கரப்பான் பூச்சி கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரம்

(கனகராசா சரவணன்) கரப்பான் பூச்சியுடன் கோழிப்புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நேற்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.…

கல்முனை மாநகர சபையை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று, ஒரு தொகுதி மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக…

தேர்வுத் துறை இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் கைது

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

கொழும்பில் நடந்த பரபரப்பு சம்பவம் – சகோதரனை காப்பாற்ற போராடிய சகோதரி

கொழும்பில் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி படுகாயமடைந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன!

எதிர்வரும் 10/09/2022ம் திகதியன்று “செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், #PAC குழுமத்தின் உளவியல் பிரிவினரின் ஏற்பாட்டில் பல இளைஞர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் எதிர்வரும் 10/09/2022 (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் நடைபவனி…