எதிர்வரும் 10/09/2022ம் திகதியன்று “செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், #PAC குழுமத்தின் உளவியல் பிரிவினரின் ஏற்பாட்டில் பல இளைஞர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் எதிர்வரும் 10/09/2022 (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் நடைபவனி மற்றும் வீதி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடை பவனி சனிக்கிழமை காலை 7 மணிக்கு கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதியினூடாக காந்தி பூங்காவை சென்றடைந்து

காந்திப்பூங்காவில் வீதி நாடகம் இடம் பெறும்.

தற்கொலையற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் கலந்துகொள்ளுமாறு மிகத்தாழ்மையாக அழைக்கின்றோம்.

#PAC ஊடகப்பிரிவு.