கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த மாதம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றமாக பெறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இலங்கை மத்திய வங்கி

மேலும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெறப்பட்ட மொத்த பணத்தின் பெறுமதி 2214.8 மில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117