சுனாமி அபாயம் இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். 

இன்று இந்தியப் பெருங்கடலில பாரிய நிலநடுக்கம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளது.

எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லாத போதிலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.6.6 ரிச்டர் அளவில் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியப் பெருங்கடலில பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டு  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.