ஊடக அறிக்கை:

திகதி: 28 / 12 / 2023

“இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்றுங்கள்”

மறைந்த மும்மூர்த்திகளான தந்தை செல்வா, வன்னியசிங்கம் மற்றும் நாகநாதன் அவர்களால் மார்கழி 18, 1949இல் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை, ஒரு சிலரின் தனிப்பட்ட சுயநல அரசியலால், சிதைந்து சின்னா பின்னாமாக உருவாகின்றதோ என்ற அச்சம் கட்சியின் ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது !

பல காலமாக சிங்கள பேரினவாத சக்திகள் தமிழரசுக் கட்சியை தூள் தூளாக உடைக்க எடுத்த பல முயற்சிகளை, தந்தை செல்வா அவர்களின் தலைமையில் இருந்தவர்கள் அதை முறியடித்து வந்தார்கள். அதன் பிறகு, அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலும் வலுமையாக நகர்ந்தது. பெரிய இடைவெளிக்கு பின், சம்மந்தர் ஐயாவின் தலைமையில் ஏதோ ஆமை வேகத்தில் நடந்தாலும் குறைந்தபட்சம் ஒற்றுமையாக செயற்பட்டார்கள் !

தற்பொழுது, தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இடம்பெறாத, தலைமை போட்டிக்கு 3 பேர் போட்டியிடுவதை பார்த்தால் இலகுவாக புரிகின்றது, சிங்கள பேரினவாத சக்திகள் பல காலமாக போட்ட திட்டம் விரைவில் நிறைவேறப் போகின்றது !

விடுதலைப் புலிகள் காலத்தில் பலமாக இருந்த TNAயை வருடம் 2010இல் உடைத்த ரணில், அதன் பிறகு இந்த வருடம் உள்ளூராட்சி தேர்தலென்று சொல்லி, எந்தவொரு செலவுமில்லாமல் TNAயை தூள் தூளாக உடைத்து, தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்திய ரணில்,

அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில், தான் பலமாக இருந்தால் தமிழர்களிற்கு தீர்வு கிடைக்குமென்று நரி தந்திரத்தை சொல்லி, தமிழரசுக் கட்சியைக்குள் பல பிரிவுகளை உருவாக்கி, அவர்களை மோதவிட்டு தமிழரசுக் கட்சியை முழுமையாக அழிப்பதே ரணிலின் திட்டம் !

தற்பொழுது, சிங்கள பேரினவாத சக்திகளிடமிருந்து தமிழரசுக் கட்சியை காப்பாற்ற வேண்டுமாயின், குறைந்தபட்சம் 2 வருடத்திற்கு தலைவருக்கான தேர்தலை தள்ளிப் போட வேண்டும் மற்றும் தற்போதைய தலைவர் மாவை அவர்களே தொடர்ந்து பயணிக்க வேண்டும். சிலவேளை, அவர் அதை விரும்பவில்லையென்றால், சிவிகே சிவஞனாம் அவர்களை தற்காலிக தலைவராக ஏற்று செயற்படுவதே சிறந்த வழி !

***தமிழரசுக் கட்சியின் யாப்பில், தலைவராக வருபவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், கட்சியின் வளர்ச்சி சிறப்பாக அமையும்.

தயவு செய்து தமிழரசுக் கட்சியின் மேல் நிலை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிந்தித்து செயற்படுங்கள் !

இப்படிக்கு,
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள்.
தருகோணமலை மாவட்டம்
28/12/2023