ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன்
( வி.ரி.சகாதேவராஜா)
தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார்.
தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில் வாழும் வலதுகுறைந்த இருவருக்கு நேற்று வழங்கிவைத்தார்
பிரதேச சபை உபதவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதாமாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் மேலும் எதிர்காலத்தில் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் உபதவிசாளர் கு.புவனரூபன் தெரிவித்தார்.
