பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவையும், மறைந்த கழகத்தின் உறுப்பினர்களது ஞாபகார்த்தமாவும் 22.02.2026ம் ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு இரத்ததான முகாம் சிற்பபாக நடைபெற்றது.
இரத்ததான கொடை வழங்கிய அனைத்து கொடையாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர், இரத்தவங்கிக்கு பொறுப்பான வைத்தியர் அதன் ஊழியர்கள், இவ் முகாமிற்குரிய உபசார அனுசரணை வழங்கிய
க. பிரியன், இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய கழகத்தின் அனைத்து அங்கத்தவர்கள், அனைவருக்கும் காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தினர் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.
