.

கல்முனை மெதடிஸ்த திருச்சபையால் நடாத்தப்படுகின்ற அக்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஒளி விழா.

பெரியநீலாவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருட காலமாக கல்முனை மெதடிஸ்த திருச்சபையால் நடாத்தப்படுகின்ற அக்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டம் இயங்கி வருகிறது.

இந்த சிறுவர் அபிவிருத்தி திட்டத்தில் 20 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 175 இற்கு மேற்பட்ட சிறுவர்களை உள்ளடக்கி அவர்களுக்கான சத்துணவு பொருட்கள், விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பிள்ளைகளுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கடந்த 19.12.2023 அன்று பெரியநீலாவணை திருச்சபையில் கல்முனை திருஅவையின் முகாமைக்குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளையின் தலைமையில் அருட்செல்வி சுலோஜினியின் ஜெபத்துடன் ஒளி விழா ஆரம்பமானது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் , விசேட விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் A.அமலதாசன், Compassion திட்டத்தின் மட்டக்களப்பு தெற்கு பிராந்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் S.சாம்சுரேன் , சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் Dr.ரொசாண் , திட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், கிராம் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து சிறப்பித்தனர்.