பெரியநீலாவணை பிரபா

கல்முனை மெதடித்த திருச்சபையால் சுத்திகரிப்பு,தொழிலாளர்கள்,வீதியோர தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை மெதடிஸ்த திருச்சபை இந் நிகழ்வு தொடர்பாக கல்முனை நெற்றுக்கு இவ்வாறு தெரிவித்தனர்.


மூவின மக்களும் வாழுகின்ற கல்முனை மாநகரப் பிரதேசமானது மக்களின் அன்றாட நடவடிக்கைகளால், செயற்பாடுகளால், சுற்றுச்சூழல் மாசடைவதும் குப்பை குழங்கள் அன்றாடம் நிறைந்து மக்களது சுகாதாரத்துக்கு அசோகாரியங்களை ஏற்படுத்துவதும் வழமையாக நடக்கும் ஒன்றாகும்.

சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கல்முனையை சுத்தமாக வைத்திருப்பதில் மாபெரும் பங்கு வகிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் அந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு,அன்றாடம் வீதீயோரங்களில் தொழிலில் ஈடுபடுபவர்களையும், கல்முனை மெதடிஸ்த திருசபை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது என தெரிவித்தனர்.

கடந்த 26 .12. 23 தேதி அன்று பிற்பகல் 4 மணிக்கு கல்முனை மெதடிஸ்த்த திருச்சபையின் அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் அருட்செல்வி சுலோஜினியின் ஜெபத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்விலே கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் A.அமலதாசன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் V.பிரபாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சுத்திகரிப்பு,மற்றும் வீதியோர தொழிலாளர்கள் அனைவரும் மாலை போட்டு வர வேற்று கௌரவிக்கப்பட்டதுடன், மெதடிஸ்த திருச்சபையினால் அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.

திருச்சபையின் சிறுவர் சிறுமிகளால் கலை நிகழ்வுகளும் அரங்கேறியது. சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சார்பாக ஒருவரால் தங்களை கௌரவித்தமைக்காக திருச்சபைக்கு நன்றி கூறப்பட்டதுடன் இறுதியாக தினேஷ் நன்றியுரை கூற அருட்திரு ரவி முருகுபிள்ளை ஜெபம் செய்யப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றன.