-கஜானா –

அறிஞர் அண்ணா மன்றம் நடாத்திய முப்பெரும் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா மண்டபத்தில் தமிழ்நாடு சென்னை தமிழில் ஆய்வு மையம் மற்றும் ஜெர்மனிய தமிழருவி வானொலி அனுசரணியுடன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின்போது கவிஞர் சரவணன் திரு சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்களின் உயிர்ப்பின் முகவரி சிறுகதை தொகுப்பு நூல், திருமதி தனலட்சுமி முரசொலி மாறனின் அரசியல் சமூகவியல் அறிமுகமும் ஆய்வும் கட்டுரை தொகுப்பு நூல் மற்றும் விவேகவெளி தமிழேந்திரன் திரு சரவணமுத்து நவேந்திரனினுடைய தாயும் தமிழும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் டி ஜே அதிசயராஜ் ,கிழக்கு மாகாண பண்பாட்டளர்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. நவநீதன், பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் ,கவிஞர் சோலை கிளி ,இறைவரித் திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி கணேசராசா, கல்முனை வலையக்கல்வி பணிப்பாளர் ஜனாப் அப்துல் நஜீம் ,கலாநிதி அனுசியா சேனாதிராஜா சைவ புலவர் ரஞ்சித மூர்த்தி ,அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பாட்டழகன், ஜெர்மனிய தமிழருவி வானொலி நிறுவனர் நயினை விஜயன் என பலர் இதன் போது கலந்து கொண்டனர் .


?????? ???????????