அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை..

கு.பகிர்ஜன் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடி கொடுத்தார்.

கதுஸ்கர் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 4வது இடத்தையும்

ஹேமலக்சன் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 6வது இடத்தையும்

ருதர்சா 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 80M தடைதாண்டலில் 6வது இடத்தையும்

கோமரஜன் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசுதலில் 9வது இடத்தையும்
குண்டு போடுதலில் 10வது இடத்தையும்

குகப்பிரியன் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 9வது இடத்தையும்

கிரணிதன் அதே கோலூன்றி பாய்தல் போட்டியில் 11வது இடத்தையும் பெற்றுள்ளனர்

ஒட்டுமொத்தமாக மட்/பட்/ களுதவளை ம.வி தேசிய பாடசாலை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 15 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது.