ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி!
மட். ஆரையம்பதியில் பேருந்து மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை சில்லில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதானது,
ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏற முற்
பட்ட தாய்க்குப் பின்னால் சென்ற ஆண் குழந்தை மீதே பஸ் மோதியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் இன்று திங் கட்கிழமை பிற்பகல் வேளையில்
இடம்பெற்றுள்ளது என்று காத்தான் குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதிஇ முதலாம் பிரிவு,காளிகோவில் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் றிகோஸ்வரன் (வயது 3) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் போக்கு வரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.