மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் !
2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் அபிவிருத்தி திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், 18.06.2025 மற்றும் 19.06.2025 ஆம் திகதிகளில் பணிப்பகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுஷியா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பிராந்திய ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் திட்ட வரைபுகளையும் காட்சிப்படுத்தினர்.
வைத்தியசாலைகளின் உடனடித் தேவைகள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் அவற்றிக்கான நிதியீட்டங்கள அவற்றை அமுலாக்குவதற்கான திட்டங்கள் என பலவேறுவிடங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.












