-எஸ். அதுர்சன்-

பெரிய நீலாவணையில் ஆறுபேர் அதிபர்களாக தரம் உயர்வு!

கிழக்கு மாகாணத்தில் SLPS அதிர்பர் தேர்வில் அதிபர்களாக தரமுயர்த்தப்பட்ட 486 பேரில்

பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் அதிபர்களாக தேர்வாகியுள்ளனர்.

இலங்கை அதிபர் தர தேர்வுப் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் நேர்முகப் பரீட்சை ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு ஆசிரியர்கள் அதிபர்களாக தேர்வாகி தமது கல்விச் சேவையை தொடரவிருக்கின்றனர்.

திருமதி. வா.ஐங்கரன்.(191) திருமதி.கே.சுரேஷ்.(192)
திரு.தோ.நிக்லஸ்.(175)
திரு.கி.அருண்குமார்.(179)
திரு.எஸ்.சதீஷ்குமார். (185)
திரு.எஸ்.புவனேஸ்வரன்(177) ஆகியோரே அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டவர்களாகும்.

பெரிய நீலாவணை பொது மக்கள் ,பொது அமைப்புக்கள் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளை, நமது எதிர்கால சந்ததிகளை ஆளுமைமிக்கவர்களாக வளர்தெடுக்கும் உயரிய தலைமைப் பணியில் இணையும் நீங்கள் தங்களுக்காக வழங்கப்படும் பாடசாலைகளில் அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கி ஆரோக்கியமான கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கு தங்களாலான அர்ப்பணிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
.