உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் வாணி விழா மிகவும் சிறப்பாக அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், பரிசளிப்புக்கள்,கெளரவிப்புக்களும் இடம் பெற்றன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனும், மற்றும் அதிதிகளாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச. சரவணமுத்து, ஓய்வு நிலை அதிபர்களான திருமதி அ. பேரின்பராஜா, கா. சந்திரலிங்கம், இந்திரன் அறக்கட்டளை பணிப்பாளர் க. ரூபசாந்தன், ஓய்வு நிலை ஆசிரியர் கதிர். கருணாநிதி ஆகியோரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.