நிதான்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது….

1989ஆண்டு தனிப் பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்டு பிற்காலத்தில் அமைச்சரவை அனுமதியோடு 30வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அரசியல் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டமை வெளிப் ளப்படை.

அதிகாரங்கள் பறிக்கப்பட்டும் வழங்கப்பட்டும் நிலை இல்லாமல் அரசியல் இனவாத சூழ்ச்சிக்குள் சிக்கி இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த்து.

.இன்று இடம்பெற்ற வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் முன்னிலையாகி வருகியிருந்தார்.

இந் நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று ஒன்று இல்லை எனவும் உப பிரதேச செயலகம் எனக் கூறியும் இடையீட்டு மனுதாரராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீயூர் ரஹ்மான் ஆகியோரால் இடையீட்டு மனு இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது.இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா,பைசர் முஸ்தபா ,சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் தோன்றி இருந்தனர்.

இவ் வழக்கின் இடையீட்டு மனுதாரர்களின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 3ம் திகதி மற்றும் இன்று 6திகதியும் வாய்மொழி சமர்ப்பணங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான சமர்ப்பணங்கள் சட்டமா அதிபர் சார்பிலும் இடையீட்டு மனுதாரர்களில் சார்பிலும் இடம்பெற்றது.இதில் இடையீட்டு மனுதார்கள் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா,மற்றும் சஞ்சீவ ஜயவர்த்தன ஆகியோர் இது உப பிரதேச செயலகமே தவிர இது ஒரு பிரதேச செயலகம் அல்ல என்று புலிப் பயங்கரவாதிகள் உருவாக்கியது என்றும் இதனை பிரதேச செயலகமாக கருத முடியாது முறைப்படி கல்முனை பிரதேச செயலகத்தில்தான் ஆளுகை செய்யப்பட வேண்டும் என வாதங்களை முன் வைத்தனர்.இதனை தொடர்ந்து இதற்கு ஆட்சேபனை சமர்ப்பணங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் பின்வருமாறு தனது ஆட்சேபனை வாதத்தை முன்வைத்து இருந்தார்.


“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமே அங்கு அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாது வர்த்தமானி இல்லாவிடினும் இலங்கையில் பல்வேறு பிரதேச செயலகங்கள் இயங்குகின்றன.குறிப்பாக வாழைச்சேனை கோரளை பற்று மத்தி,நாவிதன் வெளி பிரதேச செயலகம், ஏறாவூர் என பலதை தொட்டு ஆட்சேபனையை தெரிவித்ததோடு தனியான பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்டு அமைச்சரவை தீர்மானமும் எடுத்து 30வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 30வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் பிரதேச செயலகமாக இயங்கியதை 15க்கு மேற்பட்ட அமைச்சுக்கள் 50க்கு மேற்பட்ட திணைக்களங்கள் ஏற்றுக் கொண்ட விடயத்தினை ஏன் நாட்டின் ஜனாதிபதி கூட தனிப் பிரதேச செயலகமாக பாவித்து Grant வழங்கி உள்ளார் பிரதேச அபிவிருத்தி தலைவர்கள் நியமிக்கப்பட்டு தனியே பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமும் நடத்தப்பட்டது.இது முழுமையான பிரதேச செயலகமே இப்போது இதன் அதிகாரம் பறிக்கப்படுகின்றது இது தற்போதைக்கு தடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தடையுத்தரவுகளையும் வழங்க வேண்டும் அதனை தொடர்ந்து சட்டபூர்வமான எதிர்பார்ப்பு (legitimate expectation) கீழ் உடனடியாக அதிகாரங்கள் முழுமையாக பிரயோகிக்க செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையாக்க வேண்டும் எனவும் தனது வேண்டுதலை வைத்ததை தொடர்ந்து வழக்கின் வாதப் பிரதிவாதங்களை கேட்ட நீதிமன்றம் தனது இடைக்கால தீர்வு தொடர்பான கட்டளை தொடர்பில் எதிர்வரும் 15.11.2023அன்று வழங்குவதாக இன்று அறிவித்தது