எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா, மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருகின்றது.

இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் ஏற்படும் மெலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீரைக் குடித்து வாசனை வீசுவது போன்றவற்றின் ஊடாக இந்த பாக்டீரியாக்கள் உட்கொள்வதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You missed