ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தின நினைவேந்தல் மட்டக்களப்பில் இடம் பெற்றது!

((கனகராசா சரவணன்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை (24) எழுச்சிபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது

இதில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் பொன்.செல்லத்துரை (கேசவன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,

உள்ளூராட்சி மன்றங்களின் முன்னால் உறுப்பினர்கள், உயிர்நீத்தவர்களின் உறவுகள், மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாபின் திருஉருவ படத்திற்கு மலர்;மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.