கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வானது 2023.05.12 ஆம் திகதி வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் தாதியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வானது சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன், பிரதிப்பணிப்பாளர் Dr. J. மதன் ,தாதிய கல்லூரியின் முன்னாள் அதிபர் Mrs. வீரசிங்கம் , வைத்திய நிபுணர்களான குழந்தை நல மருத்துவ நிபுணர் Dr. V. பிரேமினி, சத்திர சிகிச்சை நிபுணர் Dr.A. W. M. சமீம், கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. N. நிரோஷன் பொது வைத்திய நிபுணர் Dr. N.இதயகுமார், என்பு சத்திர சிகிச்சை நிபுணர் Dr. S.வருண் பிரசாந்த் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. H. M. ரசீன் முஹமட், தாதிய பரிபாலகர் Mr.N. சசிதரன் , தாதிய பரிபாலகி Mrs.L.சுஜேந்திரன் நிர்வாக உத்தியோகத்தர் Mr. T. தேவஅருள் அவர்களுக்கும் மாலை அணிவித்து வரவேற்பு செய்யப்பட்டு. மேலும் இறைவணக்கத்துடனும் மங்கள விளக்கேற்றளுடனும் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தாதிய உத்தியோகத்தர் Mr. A. N. De. அல்விஸ் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தனது வரவேற்புரையில் எமது அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்றதோடு மேலும் இந்நிகழ்வினையும் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் தாதிய கல்லூரி முன்னாள் அதிபர் மற்றும் தாதிய பரிபாலகி அவர்களினால் தாதிய தின கேக் வெட்டியும் அனைத்து தாதிய உத்தியோகத்தர்களும் சுடர் ஏந்தி உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாதிய உத்தியோகத்தர் ஒருவரினால் கவிதை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. மேலும் தாதிய பரிபாலகர் Mr.N.சசிதரன் அவர்களினால் விளக்கக்காட்சியுடனான உரையும் நிகழ்த்தப்பட்டது. மேலும் காதுக்கு இனிமையாக தாதிய உத்தியோகத்தர்களினால் தாதிய தின பாடல் ஒன்றும் பாடப்பட்டது. மேலும் அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாதிய கல்லூரியின் முன்னாள் அதிபர் Mrs. வீரசிங்கம் அவர்களினால் சிறப்புரையும் வழங்கப்பட்டது. அவரின் உரையில் தாதியத்தின் ஸ்தாபகரான “புளோரன்ஸ் நைட்டிங் கேர்ள்” அம்மையாரின் தாதிய கொள்கைகள் பற்றியும் அவரது சிறப்பான அணுகு முறைகள் பற்றியும் குறிப்பிட்டு கூறியதோடு சிறப்பான மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளை இந்த சமூகத்துக்கு வழங்க வேண்டும் என கூறி அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்களையும் கூறி தனது உரையை முடித்தார். மேலும் வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. அவரின் உரையில் உரையில் தாதியத்தின் ஸ்தாபகர் அவர்கள் உலகம் முழுவதும் தாதியப்பயிற்சி பாடசாலைகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் சிறப்பான தாதியத்தின் மூலமாக இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்கிய ஒருவராகவும் திகழ்ந்தவர் எனவும் அவரின் அர்ப்பணிப்பான பணிகளை எடுத்து கூறியதோடு தாதியர்கள் தங்களது பணிகளை மனம் வைத்து சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும் எனவும் கூறி மேலும் வைத்தியசாலையின் வினைத்திறனான அபிவிருத்திக்கும் தாதியர்களின் சிறந்த சேவை ஒரு காரணியாக அமைந்ததாகவும் அவர்கள் பல சவால்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு செய்த செயல்களையும் பற்றி பெருமைப்படுத்தினார். மேலும் தாதிய உத்தியோகத்தர்களின் மிக சிறந்த ஆளிடைத் தொடர்பும் எமது வைத்தியசாலையை உயர்ந்த இடத்திற்கு ஈட்டுச்செல்லவும் முடிந்ததாகவும் தாதிய தினத்தில் தனது நல்வாழ்த்துக்களையும் கூறி இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார். இறுதி நிகழ்வாக நன்றியுரையினை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு. G. சோழவேந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.

You missed