2023 ஏப்ரல் மாதத்திற்கான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

தமது டுவிட்டரில் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர்

“2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகமாகும் என்றும், பணம் அனுப்பிய தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தமாக அனுப்பப்பட்ட தொகை 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You missed