ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்று சந்திப்பு நடைபெற்றது. அதிகாரப் பகிர்வு தொடர்பான இரண்டாவது சந்திப்பு மறுநாள் 12ஆம் திகதி இடம்பெறவிருந்தபோதும், நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியிருந்தமையால் பேச்சு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.ஜனாதிபதி செயலகத்தில் இன்று மலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.