கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.05.10 ஆம் திகதியன்று சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக சித்திரை களியாட்ட நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் பிரதிப் பணிப்பாளர் Dr.J.மதன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், மிட்டாய் சேகரித்தல், சோடாவிற்கு வளையம் போடுதல், பணிஸ் சாப்பிடுதல், பலூன் ஊதி உடைத்தல், வினோத உடைப்போட்டி, சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், சங்கீத கதிரை போன்ற பல விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு பல பரிசில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணிப்பாளர் உரை நிகழ்த்தப்பட்டது. அவரின் உரையில் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றினால் தடைப்பட்டிருந்த இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அனைவரும் இந்நிகழ்வில் குழுவாக செயற்படுவது மிகவும் சந்தோசமளிக்கிறது என்று கூறியதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்றதோடு, போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசு பண வவுச்சருக்கான அனுசரனை வழங்கிய கல்முனை ஹற்றன் நெஷனல் வங்கியின் (HNB) முகாமையாளர் திரு.அல்பர்ட் நிர்மலகுமார் அவர்களுக்கும் ஏனைய அனுசரனையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது பல்வேறு வழிகளிலும் நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவிய ஏற்பாட்டுக்குழுவினர் மற்றும் இந்நிகழ்வில் கலந்து பங்குபற்றிய பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார். மேலும் இந்நிகழ்வின் நிகழ்ச்சிகளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.G.சோழவேந்தன் அவர்கள் தொகுத்து வழங்கியதோடு தரமுகாமைத்துவ பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.P.செல்வகுமார் நிகழ்ச்சிகளுக்கான மேலதிக ஒருங்கிணைப்புக்களையும் நடைபெற்ற விளையாட்டுக்களுக்கான நடுவராக இரத்தவங்கியின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.V.குலேந்திரகுமார் அவர்களும் இந்நிகழ்வுகளுக்கான நிதி சேகரித்தலுக்கான பங்களிப்பினை அதிதீவிரசிகிச்சைப்பிரிவின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.N.P.மதுரா அவர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்டது. வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், திரு. M. கேந்திரமூர்த்தி (கணக்காளர்), திரு. N. சசிதரன் (தாதிய பரிபாலகர்)திருமதி. L. சுஜேந்திரன் (தாதிய பரிபாலகி), திரு. T.தேவஅருள் (நிர்வாக உத்தியோகத்தர்), தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் சகல பிரிவுகளின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்ததோடு விளையாட்டுக்களிலும் பங்குபற்றி தங்களது திறமைகளையும் வெளிக்காட்டி பரிசுகளையும் வென்றனர். மேலும் பல்வேறு விளையாட்டுக்களில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களான மயக்கமருந்து வைத்திய நிபுணர் Dr.L.B. மியூரு உதயங்க, குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் Dr.V. பிரேமினி மற்றும் Dr.S.N. ரொஷாந்த், கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.N. நிரோஷன், மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr.H.M. ரசீன் முகமட் மற்றும் கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் Dr.M.S.F.மபா(f)ஷா போன்றோர் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு தங்களது திறமைகளையும் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக தரமுகாமைத்துவ பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.P.செல்வகுமார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் முடிவுற்றது.

You missed