கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது!

-கபிலன் –

கல்முனை சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக நடாத்தப்படும் KPL தொடரின் 11 வது சுற்றுத்தொடர் போட்டிகள் பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 2023.05.20 ம் திகதி முதல் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் சுற்றுத்தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளதோடு, கடந்தவாரம் இப்போட்டிகளுக்கான வீரர்கள் பிரம்மாண்டமான ஏலம் வாயிலாக தெரிவு செய்யப்பட்டு விளையாடுவதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சமுக வலைத்தளங்கள் எங்கும் KPL பற்றிய புகைப்படங்களும், வீரர்களின் ரசிகர்களுக்கிடையிலான வாக்குவாதங்களும் சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

பற்பல சுவாரஸ்யமான பல விடயங்கள் இம்முறை இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளதோடு தாங்களும் எந்த அணி இம்முறை கிண்ணத்தை வெல்லப் போகின்றது என பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்

You missed