இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலகத்தில் கணக்காளர் எஸ்.எவ். சபானா
தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி மேற்கொண்டதுடன் ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திரு ந. பிரதாப் மேற்கொண்டார்.
நிகழ்வுகளாக தேசியகீதம் இசைத்தல் அறநெறி கீதம் இசைத்தல், வாக்குறுதி எடுத்தல் மற்றும் தலமையுரை, விளக்கவுரை, என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு எம்.எம் .சுபைர் கலாசார உத்தியோகத்தர்கள், பிரிவுகளுக்கான கிளைத்தலைவர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.













