செ.டிருக் ஷன்

கல்முனை மாநகரின் பழம்பெரும் பதியாம் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா 2023கிரியைகள் அனைத்தும் வரும் சித்திரை மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சித்திரை மாதம் நான்காம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய் காப்பு சாத்தலுடன் ஐந்தாம் திகதி புதன்கிழமை நகுலேஸ்வரப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் இடம்பெற காத்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து கயிலை மலையானுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறும்.

இவ் கும்பாபிஷேக கிரியைகள் அனைத்தும் சிவஸ்ரீ நடராஜ சதீஷ்வர ஷர்மா (ஆலய பிரதம குரு) அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும்.

அனைத்து அடியார்கள் களையும் கிரியைகளில் கலந்து கொண்டு நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரப் பெருமானின் நல்லருளை பெறுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.