No.

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். இராசன் ஆகியோருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (11) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் நிதி உதவியாளர் எஸ். சுபாஷினி, சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிட் நெளசாட் மற்றும் நூலகர் ஏ.எம். முஸ்தாக் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

இதன்போது மேற்படி ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் இருவரினதும் நீண்ட கால உன்னத சேவைகள் குறித்து பிரஸ்தாபித்து, பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப்பா கையளிக்கப்பட்டு, பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் பொன்னாடைகள் போர்த்தியும் கெளரவிக்கப்பட்டனர்.