13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆளுநராக பதவி வகித்துக்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதி அதிகாரங்களை நேரடியாக மாகாணசபைகளின் ஆளுநர்கள் கொண்டிருக்கும் போது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தகூடாதென தெரிவிப்பது வேடிக்கையாகவுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்ததிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எதிர்ப்பை தெரிவிப்பது கூட பறவாயில்லை ஆனால் அவர் அதனை எதிர்த்துக்கொண்டு தொடர்ந்து எவ்வாறு ஆளுநராக உள்ளார் என்றும் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ளதை அமுலாக்ககூடாது என்று தெரிவிக்கின்ற அரச அதிகாரிகள் உள்ள ஒரேஒருநாடு இலங்கை மட்டுமே என்றும் த.சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.