திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வழமையான பரிசோதனைக்காகவே இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் ஒருசில நாட்களில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.