கல்முனை சைவ மகாசபையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ம் சைவ மகாசபையின் தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், எம் ராமக்குட்டி (உதவி பிரதேச செயலாளர் பொத்துவில்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக Dr. T. கேதீசன், ஹற்றன் நெஷனல் வங்கி கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் P. ரமணதாச, கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலை அதிபர் திருமதி விஜயசாந்தி நந்தபால ஆகியோரும், கௌரவ அதிதிகளாக திருமதி சிவப்பிரியா நாகையா (இந்து கலாச்சார உத்தியோகத்தர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்) சி. வை. சுந்தரநாதன் (தலைவர் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயம்) வே. தியாகராஜா (பிரதம வண்ணக்கம் ஸ்ரீ முருகன் ஆலயம்) ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் கௌரவிப்பு சைவ மகாசபையின் தலைவருக்கான கௌரவிப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றது கல்முனை சைவ மகாசபையினர் கடந்த பல காலங்களாக அறநெறி பாடசாலைகள் மற்றும் சைவ சமய அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.