கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை யில் 2022 ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத வேண்டிய எதிர் வரும் காலங்களில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை ஆசிர்வதிக்கும் விழா பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் நல்ல தம்பி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணையாளர் எம்.கோபாலரட்னம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட விஞ்ஞான ஆய்வு நிலையத்திலிருந்து ஒய்வு பெற்ற பணிப்பாளர் என்.புல்லிநாயகம் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து விஷேட அதிதியாகவும் பாடசாலையின் முன்னாள் அதிபர் வி.பிரபாகரன் உட்பட ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பாடசாலையின் அதிபர்கள், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவித்துடன் பல துறைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு கௌரவமும் நினைவச்சின்னமும் வழங்கப்பட்டு அதிதிகளையும் கௌரவித்தனர்.

மாணவர்களின் பல நிகழ்வுகள் மேடையில் இடம்பெற்றதுடன் மாற்றுத்திறனாலிகளின் நிகழ்ச்சியும் மற்றும் கண்ணோட்டம் உயர்தர நினைவு மலரும் வெளியிடப்பட்டது.