வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று(10.01.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று தீர்மானம்

இது தொடர்பில் அவர் கூறுகையில்,வேட்புமனு ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக பல மாவட்டச் செயலாளர்களும் தமக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி இன்று(11.01.2023) தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.