பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026


என். செளவியதாசன்

பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை கிராமத்தில் இருந்து விரைவில் பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் இன்று(13) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு எ. லோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதான நிதி அனுசரணையை H.S ஹாட்வெயார் அன்ட் கன்செக்சன் நிறுவன உரிமையாளர் திரு கே.சுதீபன் வழங்கியிருந்தார். நிகழ்வின் பிரதம அதிதியாக கதீபன் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டதோடு, மேலும் அதிதிகளாக பிரதி அதிபர் முஷாபீர்,மற்றும் பிரதி அதிபர் பற்குணம், மற்றும் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் பி. ஜெகநாதன்,PEDO அமைப்பின் இஸ்தாபகர் சுபராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.