இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய எமது பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிரதமர் ஹரிணியை குறிவைத்து நாட்டின் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற விமர்சனங்களை நாட்டின் அறிவார்ந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.