களுதாவளையில் இலவச வாகன தரிப்பிட சேவை – இளைஞர்களால் முன்னெடுப்பு!


கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் உற்சவத்தின் முதல் நாள் (ஜூலை 01) பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்த வண்ணமுள்ளனர்.

நாளை ஜூலை 02 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

இன்று இரவு (01-07-2025) ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி அவர்களின் வாகன பாதுகாப்பிற்காக முதன் முதலாக இலவச வாகன தரிப்பிட சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

களுதாவளை கிராம இளைஞர்களின் இவ் முன்மாதிரியான செயற்பாட்டை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.