( வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயத்தில்  ஆற்றிவரும் அரிய அர்ப்பணிப்பான சேவைக்காக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரை நேரில் சென்று பாராட்டிக் கௌரவித்தனர். 

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார்  தனது கடமையை பொறுப்பேற்று சிறந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக இன, மத, பேதம் கடந்து ஒரு வருடம் பூர்த்தி செய்து தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

 இவரை கௌரவிக்கும் முகமாக பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் சம்மாந்துறை 2015 ஓயெல் பௌண்டஷன் அமைப்பினர் கௌரவித்தனர் .

அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற 

இந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் கடந்தகால கல்வி நிர்வாக செயற்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மாணவர்களின் எதிர்கால கல்வி,விளையாட்டு மற்றும் ஏனைய செயற்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.