சம்மாந்துறை ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வுகள் இன்று முகாமைத்துவ பணிப்பாளர் எ.ஐ.சர்ஜீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் அவர்களும், கௌரவ அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும், சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் சாபீர் அவர்களும், கருவாட்டுக்கல் -01 பிரிவின் கிராம சேவகர் ஐ.பாயிசா அவர்களும் கலந்து கொண்டதோடு மேலும் விசேட அதிதிகளாக எம்.எச்.ஸம்றினா அவர்களும், ஜே.எஸ்.றியானா அவர்களும், கே.எல்.றினோசா அவர்களும், எம்.ரீ.பௌசியா அவர்களும் மேலும் ஆசிரியர்களான ஏ.சிறாஜின்னிசா, எம்.எச்.ஹசீனா, எம்.எச்.பர்ஹானா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு கலந்து கொண்ட சோ.வினோஜ்குமார் உரையாற்றுகையில் “தற்காலத்தில் சிறுவர்களை வளர்ப்பதில் பிழையான தொழில்நுட்ப பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையால் அதிக சிறுவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பான நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாலர் பாடசாலையில் இருந்தே சிறுவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் பெற்றோர் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுடன் சுயாதீனமாக பேசி அவர்களது பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

“மேலும் மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டம் செய்வதற்கான பயிர்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.