தீபாவளியை கொண்டாடும் பெருந்தோட்ட மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள இன்று விசேட கோரிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை கொண்டாடும் முகமாக சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்களினால் 5000 ரூபாய் முற் கொடுப்பனவுத் தொகை சில காலமாக வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தொகை போதுமானதாக இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எனவே, அரசின் தலையீட்டின் பேரில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் முகமாக, குறைந்தபட்சம்,15,000 ரூபாவேனும் முற்பணமாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

You missed