நீதியரசர் தலைமையில் குழுவும் நியமனம்

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுதிய கரிசனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

கொழும்பு, ஒக. 29 புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் தொலைசந்திப்பு முறைமை மூலம் பேச்சுக்களை நடத்தி இவற்றுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி கனடாவைச் சேர்ந்த நீதிமன்றம் சமத்துவத்துக்கான கனடா அமைப்பினருடன் நிதியமைச்சர் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளுடனும் அமைச்சர் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் குறிப்பிட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட ரோய் சமாதானம் என்பவர்
தலைமையிலான கனடா அமைப்புடனும் பேச்சு நடக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும், வடக்குக் கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காண வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முன் வைத்துள்ளன.

சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள மீதி அமைச்சர் அவர்களின் கரிசனைகளை கவனமாக செவிமடுத்துள்ளாரென தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே மூவர் அடக்கிய குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த குழுவை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You missed