பாறுக் ஷிஹான்

அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது.

இந்த நினைவு சின்னத்தை இன்று (23) பொறுப்பதிகாரியிடம் கல்முனை மறுமலர்ச்சி மன்ற பொதுச் செயலாளர் மீரா முஹைதீன் பைசல் நிர்வாக குழு தலைவர் அஹ்மட் புர்க்கான் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களான காரியப்பர் முஹம்மது றூமி இளைய தம்பி முஹம்மது சமீர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்முனை பகுதியில் கொரோனா மற்றும் எரிபொருள் நெருக்கடி காலகட்டத்தில் பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் பராட்டை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117