ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு (21) பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு கடந்த (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை 4.00 மணிக்கு பஜனை ஆரம்பித்து படக்காட்சி,கிருஷ்ண கதா -சொற்பொழிவு, நாடகம்,ஆராத்தி என்பன இடம் பெற்றிருந்தன.

இதில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.