சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Bloomberg அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

கேள்வி – உங்களுக்கு IMFக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா?

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இல்லாமல் கடன் நிலைத்தன்மையை அடைய முடியும் என? மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க “உண்மையில் நாம் சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடி வருகிறோம்.

அதன் முதல் படி, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதாகும். அதற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறலாம்.

உள்நாட்டு கடன் இலக்குகளை அடைவதில் எந்த சிக்கலையும் நாங்கள் காணவில்லை.

இதனால் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும்.