ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசிலின் கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி, நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதியை விரைவில் நாடு திரும்ப வசதி செய்யுமாறு ஜனாதிபதியை சந்தித்த பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என தெரியவருகிறது.

எப்போது நாடு திரும்புவார் கோட்டாபய?

இந்த நிலையில் ஊகங்கள் இருந்த போதிலும், அவர் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி நாடு திரும்ப மாட்டார் என்றும், அவர் இலங்கை வரும் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.