செல்லையா பேரின்பராசா 

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 11.03.2026 புதன்கிழமை

இடம்பெற்றது.

இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் அதிபர் கலாதேவி பொன்னம்பலம்  முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கலாசாலையும் பெண்கல்விப் பாரம்பரியமும் என்ற தொனிப்  பொருளில் உரை ஆற்றினார்.

இந் நிகழ்வுகளை இரண்டாம் வருட  விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவன் சராப்தீன் முன்னிலைப்படுத்தினார்.

சர்வதேச மகளிர் தினம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட கொள்கைகள் ஆவணக் காணொளியாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

பெண்ணியம் என்ற தொனிப் பொருளில் வர்த்தகநெறி ஆசிரிய மாணவி ஆபிலூன் பர்ஷானா உரை ஆற்றினார் . 

அதிதி அறிமுக உரையினை பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் ஆற்றினார்.

பெண்மை பற்றிய கவிதையினை விசேட கல்விநெறி ஆசிரிய மாணவி செல்வராணி தியாகராஜா வழங்கினார் .

தமிழ்ச் சூழலில் பெண்களை முதன்மைப்படுத்திய செல்நெறி என்ற பொருளில் கலாசாலை 

அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.

ஓய்வு நிலை அதிபர் கலாதேவி பொன்னம்பலம் கலாசாலை முகாமைத்துவக் குழுவினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.