உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

“உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் பங்களிப்பு வழங்கப்படும், மேலும் இது உணவு உதவி, இலக்கு பணப் பரிமாற்றங்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வவுச்சர்களை விநியோகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்” என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து, பல குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சர்வதேச சமூகம் தனது முயற்சிகளை முடுக்கி விடுவதும் இலங்கைக்கு தனது அசைக்க முடியாத ஆதரவைக் காட்டுவதும் மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இந்த அவசர உதவி நடவடிக்கை இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் வருகிறது.

கடந்த ஏப்ரலில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக வழங்கப்பட்ட மற்றொரு 350, 000 யூரோ உதவியை தொடர்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இவ்வாறு விநியோகச் சங்கிலி முகாமைத்துவ செயல்முறைகளுக்கு இணங்க MoH ஆல் திட்டமிடப்பட்ட கொள்வனவின் படி வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு நேரடியாக பணம் செலுத்த இலங்கையை அனுமதிக்கிறது.

மேலும் கடந்த காலங்களில், 2004 சுனாமிக்குப் பின்னரும் உட்பட, இலங்கைக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் இத்தாலி தொடர்ந்து ஆதரவளித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, விவசாயத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு இத்தாலி ஆதரவளித்துள்ளது.

மேலும் பல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் பங்களித்துள்ளது.