சிவலிங்கத்துக்கான அபிசேகமும் நியாசம் நிகழ்வும் பால்காப்பு சாத்தும் நிகழ்வும் நாளைபெரியநீலாவணையில்.

என்.செளவியதாசன்

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை(*12.02.2026)வியாழக்கிழமை அன்று காலை *10:49 மணி முதல் 12 15 மணி* வரையான சுபவேளையில் சிவலிங்கப்பெருமானுக்கான *அபிசேகமும்* , *நியாசம்* செய்கின்ற நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அன்றைய தினம் விசேடமாக லிங்கத்திற்கான *பால்காப்பு* சாத்துகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. அனைத்து பக்த அடியார்களும் *தங்களது பொற்கரங்களால்* லிங்கத்திற்கான பாற்காப்பை சாத்தி எல்லாம் வல்ல லிங்கேஸ்வரனின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாக அழைக்கப்படுகின்றீர்கள் . கிரியைகள் காலை 7.00மணிக்கு ஆரம்பமாகும். பால் காப்பிற்கான பால் ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.