காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் செயற்பட்டு வந்த சில அமைப்புகளும் சுயேச்சைக் குழுக்களும் அதிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கடந்த சில நாட்களாக போராட்ட களத்தில் இருந்து பல அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் வெளியேறியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரதான நோக்கமாக இருந்த போராட்டம் முடிவடைந்துள்ளது.இதனால் எதிர்கால நடவடிக்கைகள் போராட்ட களத்தில் இல்லை என அவர்கள் கருதுகின்றனர்.

அதற்கமைய, வெளியேறும் குழுக்கள் மற்றும் அணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்திற்காக கொழும்புக்கு வராமல் இருப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பும் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.