மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து அந்த பிராந்தியத்திற்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை இந்தத் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பயணிகளினதும் மற்றும் விமானங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
