எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன்படி, மாத்தளை எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இரண்டு நாட்களாக காத்திருந்து மரணம்

குறித்த நபர், கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் வரிசையில் காத்திருக்கும்போது அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை, கிவுல பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.