கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு பழைய மாணவர்களின் இழந்ததை தேடுவோம் எனும் தலைப்பில் ஒன்றுகூடல் கடந்த 25 ஆம் திகதி சேனைக்குடியிருப்பு செல்வா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பழைய மாணவர்களும் ,அவர்களது குடும்பத்தினரும் பங்குபற்றிய இந் நிகழ்வில் குறித்த ஆண்டில் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சினங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலைக்கால பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் மகிழ்வான நிகழ்வாக இவ் ஒன்றுகூடல் அமைந்ததாக பங்குபற்றிய மாணவர்களும் ஆசிரியர்களும் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தனர்.
நிகழ்ச்சி நிரல்
திகதி: 25/08/2026
நேரம்: காலை 10:00 மணி
- மாலை அணிவித்து அதிதிகளை வரவேற்றல்.
- மங்கள விளக்கேற்றல். (தலைவர், விசேட அதிதிகள், பழைய மாணவர் சார்பாக)
- இறை வணக்கம் (இந்து, கிறித்தவம், இஸ்லாம்)
- மௌன அஞ்சலி.
- பாடசாலை கீதம்.
- வரவேற்பு நடனம்.
- வரவேற்புரை:- திருமதி. நளாயினி விவேகானந்தன்
- தலைமை உரை:- திரு. K. ராஜ்குமார்.
- பழைய மாணவர் அறிமுகம்.
- பழைய நினைவுகளை நினைவுட்டல் கவிதை (விஜிதா)
- பாடல்:- V.ஜெய ரிஷி
- பாடல்:- K.பிரேமா
- மதிய உணவு.
- வேறு நிகழ்வுகள்.
- ஆசிரியர் கௌரவிப்பு:- பொன்னாடை + பரிசு வழங்கல்
- சங்கீத கதிரை.
- பழைய நினைவுகள் பகிர்வு – பரிசு வழங்கல்.
- நன்றியுரை:- திருமதி. மரியாள்.




























